பீஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மெஸ்சி
- பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது
- அர்ஜென்டினா பாஸ்போர்ட் இல்லாததால் தடுத்து நிறுத்தம் எனத் தகவல்
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்சி மற்றும் அவரது அணி வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக சீனா சென்றனர்.
சீனாவின் பீஜிங் விமானத்தில் மெஸ்சி வந்து இறங்கியதும் போலீசார் அவரை சுற்றி வளைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் அர்ஜென்டினா பாஸ்போர்ட் வைப்பதற்குப் பதிலாக ஸ்பெயின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதில் சரியான சீனா விசா இல்லை எனத் தெரிகிறது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டதாக என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் தடங்களை சரி செய்து அவரை அனுப்பி வைத்தனர்.
Earlier today at the Beijing airport, Leo Messi faced some issues with his passport. pic.twitter.com/rLNwI3W4nJ
— Leo Messi ? Fan Club (@WeAreMessi) June 10, 2023
அர்ஜென்டினா வருகிற 15-ந்தேதி பீஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 19-ந்தேதி ஜகார்த்தாவில் இந்தோனேசியாவுக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.