லைஃப்ஸ்டைல்

சிறுதானிய தோசை செய்வது எப்படி

Published On 2016-05-21 03:07 GMT   |   Update On 2016-05-21 03:07 GMT
சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை கொண்டு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எல்லா வகை தானியங்களையும் கலந்து அரைத்த மாவு - 2 கப்  (கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரை வாலி முதலியவை)
இட்லிக்கு அரைத்த மாவு -1 கப்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

* பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறு தானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

* அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்.

* இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News