உடற்பயிற்சி

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானம்

Published On 2023-09-28 09:22 GMT   |   Update On 2023-09-28 09:22 GMT
  • அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
  • உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும் பானம்

தேவையான பொருள்கள்

இஞ்சி - ஒரு துண்டு

சீரகப் பொடி - கால் ஸ்பூன் (வறுத்து அரைத்தது),

எலுமிச்சை பழம் - பாதி அளவு

கல் உப்பு - சிறிதளவு

செய்முறை

இஞ்சியை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு அதை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் துருவிய இஞ்சி, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

இந்த கலந்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுபடபான நீரில் கலந்தால் பானம் தயார்.

பயன்படுத்தும் முறை

இந்த பானத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன கலவையை ஒரு வாரத்திற்கு ஏற்றபடி தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது வெந்நீரில் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

பயன்கள்

* இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஜீரண ஆற்றல் மேம்படும்.

* அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

* உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

* உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

* உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

Tags:    

Similar News