உடற்பயிற்சி

சாப்பிட்ட பிறகு நடப்பவரா நீங்கள்...! அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

Published On 2023-11-14 09:37 GMT   |   Update On 2023-11-14 09:37 GMT
  • சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடல் எடை குறைகிறது.
  • சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் உள்ள கலோரிகள் ஆற்றலாக மாறுகிறது.

சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடல் எடை குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. சாப்பிட்ட பிறகு நடப்பதால் உடலில் உள்ள கலோரிகள் எரிந்து ஆற்றலாக மாறுகிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதோடு இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.

பொதுவாக சாப்பிட்ட பிறகு உணவானது செரிப்பதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வயிற்றில் அசிடிட்டி, செரிமான பிரச்சினை, வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் சாப்பிட்ட சிறிது தூரம் நடப்பதன் மூலம் உணவு எளிதில் செரிமானம் அடைகிறது. இதனால் உடலில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறது.

சாப்பிட்ட பிறகு சிலர் உடனடியாக படுத்துவிடுவார்கள். அதிலும் சிலர் சாப்பிடும்போதே உடல் சோர்வினால் படுத்துவிடுவார்கள். இதற்கு சோம்பல் தான் காரணம். எனவே சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் உடலில் உள்ள சோம்பல் முறிந்து உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

சாப்பிட்ட பிறகு நடப்பது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்க நினைப்பவர்கள் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.

Tags:    

Similar News