உடற்பயிற்சி

மாலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Published On 2023-09-22 09:44 GMT   |   Update On 2023-09-22 09:44 GMT
  • மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும்.
  • உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைகிறது.

ஸ்டிரெஸ் குறைகிறது:

நாள் முழுவதும் வேலைப்பளு மற்றும் மனரீதியாக நெருக்கடி என்று சோர்ந்து போய் வருகின்ற உங்களுக்கு மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும். மாலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.

டென்ஷனை குறைக்கிறது:

பெரும்பாலான மக்கள் அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர் அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சோர்வு நீங்கும் மற்றும் இரவில் தடையற்ற நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

பயிற்சி செய்ய கூடுதல் நேரம்:

காலையில் தூங்கி எழுந்து உடற்பயிற்சி செய்தால், மீண்டும் வந்து அலுவலகத்திற்கு புறப்பட வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்குள் இருந்து கொண்டிருக்கும். உங்களுக்கான கால அவகாசமும் குறைவு தான். ஆனால், மாலையில் உங்களுக்கு நீண்ட நேரம் கிடைக்கிறது. தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் நீண்ட நேரம் கிடைக்கும்.

சிறப்பாக செயல்பட முடியும்:

காலை நேர உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மாலையில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். மாலையில் உங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மன நெருக்கடி ஏற்படாமல் உங்களால் பயிற்சிகளை செய்ய முடியும்.

கொழுப்பு மிகுதியாக கரையும்:

மாலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு தசைகளின் செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்குமாம். ஆக, உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமையும்.

இறுதி முடிவு என்னவென்றால் உடற்பயிற்சி செய்ய சிறப்பான நேரம் எது என்பது ஒரு தனி நபருக்கு உள்ள நேர வாய்ப்புகள் மற்றும் அனுபவத்தைப் பொருத்து மாறுபடுகிறது. உங்கள் உடலுக்கும், இருக்கின்ற வாய்ப்புகளையும் பொருத்து, எந்த நேரம் சிறப்பாக அமையும் என்பது குறித்து ஆலோசனை செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News