உடற்பயிற்சி

அதிகாலையில் எழுவதினால் ஏற்படும் பயன்கள்!

Published On 2023-10-13 08:56 GMT   |   Update On 2023-10-13 08:56 GMT
  • அதிகாலையில் எழுவது நம்மில் பலரால் முடியாத ஒன்று.
  • மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல்படும்.

அதிகாலையில் எழுந்திருப்பது பல நன்மைகளை வழங்கினாலும், அதிகாலையில் எழுவது நம்மில் பலரால் முடியாத ஒன்று. இன்றைக்காவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைத்து அதையும் அணைத்துவிட்டு தூங்குபவர்கள் பலர். அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் நாளை நல்ல நோக்கத்துடன் தொடங்க உதவும். சீக்கிரம் எழுவது உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரத்தை வழங்கும். அதிகாலையில் எழுவதினால் நம் உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை...

* மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

* மன அழுத்தம் குறையும். அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் இருக்கின்றன? அவற்றில் எதனை, எப்போது, எங்கே எப்படி முடிப்பது என எளிதாக திட்டமிட முடியும்.

* உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக ஈடுபாட்டுடன் சிறப்பாக செய்ய முடியும். அதிகாலை எழுவதால் காலை வேளையில் பசி எடுக்கும். காலையில் சாப்பிடுவதால் உடல்பருமன், சர்க்கரை நோய் வருவது குறையும்.

* இரவு 9 அல்லது 10 மணிக்குள் உறக்கம் தானாக வர ஆரம்பிக்கும். இரவு சரியான நேரத்துக்கு தூக்கம் வருவதால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது. வளர்ச்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

* காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்தால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் வராது. அதிகாலை 4.30 அல்லது 5.30 மணிக்குள் மூச்சுப்பயிற்சி, யோகா செய்வது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நலம் பயக்கும்.

* அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல, மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.

Tags:    

Similar News