சரியான முறையில் மூச்சுப் பயிற்சியை செய்வது எப்படி?
- மூச்சுப்பயிற்சியால் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.
- கட்டாயமாக தினசரி மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சி செய்வது வயிற்றுக்கு அடைபட்டு இருக்கும் காற்றை மட்டும் வெளியேற்றி தொப்பையைக் குறைக்கும் வேலையை மட்டும் செய்வதல்ல. அதோடு மேலும்நிறைய நன்மைகளை இந்த மூச்சுப்பயிற்சியின் வழியாக நாம் பெற முடியும். குறிப்பாக, சுவாசப் பயிற்சியை தினந்தோறும் மேற்கொண்டு வந்தால், நாள்பட்ட நுரையீரல் பிரச்சினை, நுரையீரல் செயல்பாடு, இதய சுவாசம், சுவாசக் குழாயில் மெல்லிய சதைகள் வளர்வதைத் தடுப்பது, சுவாச மண்டலத்தை பலப்படுத்துவது ஆகிய பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.
சுவாசப் பிரச்சினைக்கும் ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றவர்களுக்கும் சிறந்த தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து கட்டாயமாக தினசரி மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக, காலையில் செய்வது போன்று இரவு தூங்கச் செல்லும்முன்பும் ஒருமுறை மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஆனால் இரவு உணவுக்கும் படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.
பொதுவாக மூச்சுப் பயிற்சியில் நான்கு வகை நிலைகள் உள்ளன. அவற்றின்படி முறையாவது செய்வது தான் சிறந்தது.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொள்ளுதல். இதற்கு பூரகம் என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இது கும்பகம் என்று அழைக்கப்படும்.
3. உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளியே விடுதல் ரேசகம்
4. வெளியே சுவாசத்தை விட்ட பிறகு, அப்படியே இதை வெளியே நிறுத்தி வைப்பது.
இப்படி சுவாசத்தை முறைப்படுத்தி உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டாலே உங்களால் எளிதாக உங்கள் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.