உடற்பயிற்சி
null

ஒற்றை தலைவலிக்கு யோகா தீர்வு தருமா?

Published On 2024-06-27 03:19 GMT   |   Update On 2024-06-27 07:47 GMT
  • நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  • சில எளிய ஆசனங்களை செய்யலாம்.

உலக அளவில் தலைவலி பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்கள் மிகக்குறைவு. மருத்துவர்களிடம் செல்லாமலேயே அதனை சமாளித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

மக்கள் ஒற்றைத் தலைவலியை `வெறும் தலைவலி' என்று கருத முனைகிறார்கள், இது சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், நீண்ட காலத்திற்கு இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றைத் தலைவலியின் கிளாசிக்கல் அறிகுறிகளை மக்கள் புறக்கணித்தால், அவர்கள் நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு ஆளாக நேரிடும். என்று மருத்துவ நிபுணர் தெரிவிக்கிறார்.

மருந்துகள் ஓரளவிற்கு உதவக்கூடும் என்றாலும், யோகா வல்லுநர்கள் யோகா செய்வதன் வழியாக இதற்கான நிவாரணம் பெற உதவலாம் என யோகா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒற்றைத் தலைவலி தாக்குதல்களின் தீவிரத்தை நிர்வகிக்கவும் குறைக்கவும் சில எளிய ஆசனங்களை செய்யலாம்.

வஜ்ராசனத்தில் உள்ளங்கைகளை தொடைகளில் ஊன்றி அமரவும். கண்களை மூடிக்கொண்டு உடல் முழுவதும் தளர்த்தி ஓய்வெடுக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி முழங்கைகள் நேராக இருக்க வேண்டும்.

மூச்சை வெளியேவிட்டு, உடற்பகுதியை மெதுவாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். முதுகெலும்பில் இருந்து இல்லாமல் இடுப்பு பகுதியில் இருந்து வளைக்க வேண்டும். கைகளை சற்று வளைத்து வைத்து, கைகள், நெற்றி, முழங்கைகளை விரிப்பில் வைக்கவும். கைகள் முழங்கால்களுக்கு முன்னால் இருக்க வேண்டும். இந்த நிலை உங்களுக்கு வசதியாக இருக்கும் வரை இதே நிலையில் சிறிதுநேரம் இருக்க வேண்டும்.

அடிப்படை நிலைக்குத் திரும்ப, மூச்சை வெளிவிட்டு மெதுவாக தலையையும், கைகளையும் செங்குத்தாக உயர்த்த வேண்டும். தொடைகளில் உள்ளங்கைகளை ஊன்றிக் கைகளைத் தாழ்த்தவும். நிதானமாக ஆழ்ந்து சுவாசிக்கவும். முயல் போன்ற அமரும் இந்த ஆசனம் உங்கள் தலைவலியை கட்டுப்படுத்தும். 

Tags:    

Similar News