உடற்பயிற்சி

வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் தெரியுமா...?

Published On 2023-12-19 09:10 GMT   |   Update On 2023-12-19 09:10 GMT
  • உடம்பில் உள்ள சத்துக்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வேண்டும்.
  • வாழைப்பழம் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது.

உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு நம் உடம்பில் உள்ள சத்துக்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வேண்டும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியமும், கலோரிகளும் அதிகம் இருக்கிறது. ஆகவே நம் உடலில் சோர்வு நிலையை தவிர்ப்பதற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

வாழைப்பழம் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் நரம்பு மண்டலத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களை வளர்ச்சிதை மாற்றம் செய்யவும் பயன்படுகிறது.

வாழைப்பழம் செரிமானப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கிறது. இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எரிச்சல் மற்றும் வலிகள் அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளில் இருந்து விடுபடலாம்.

வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

வாழைப்பழத்தில் பலவகையான ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழைப்பழத்திலும் எண்ணமுடியாத அளவுக்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.

Tags:    

Similar News