வயிற்றுத் தசைகளை பலப்படுத்தும் அர்த்த ஹலாசனம்
- தீவிர முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் நல்லது.
- முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.
வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி' என்றும் 'ஹலா' என்றால் 'ஏர் கலப்பை' என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது.
அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது; தன்மதிப்பு வளர்கிறது; தன்னம்பிக்கை வளர்கிறது.
பலன்கள்
முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது. தொப்பையை கரைக்கிறது.
இடுப்புப் பகுதியை நெகிழ்வடையச் செய்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காலத்து வலியைப் போக்குகிறது.
அடி முதுகு வலியைப் போக்குகிறது. வெரிகோஸ் வெயின் வலியைப் போக்குகிறது. தொடைப் பகுதியை உறுதியாக்குகிறது
செய்முறை
விரிப்பில் படுக்கவும். கால்களை அருகருகே வைக்கவும். கைகளை உடம்பின் பக்கவாட்டில் தரையில் வைக்கவும். மூச்சை வெளியேற்றியவாறு கால்களை உயர்த்தவும்.
கால்கள் இடுப்புக்கு நேர் மேலாக 90 degree கோணத்தில் இருக்க வேண்டும். 20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களைத் தரையில் வைக்கவும்.
தீவிர முதுகு வலி, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறு உள்ளவர்கள் அர்த்த ஹலாசனத்தைத் தவிர்த்தல் நல்லது.