வாழ்க்கை முறைகளால் சுறுசுறுப்பை தொலைக்கும் இந்தியர்கள்-ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்!
- உடற்பயிற்சிகள் தான் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
- உடலுக்கான பயிற்சி பெண்களிடம் குறைவாக காணப்படுகிறது.
இந்தியர்களின் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடு பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
கரமயமாதல் அதிகரித்து வருவது போல் நகர்ப்புற வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. அதே நேரம் அன்றாட வாழ்க்கை முறைகளால் பெரும்பாலானவர்கள் சுறுசுறுப்பை தொலைத்து செயலற்றவர்கள் போல் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 5-ல் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகள் விளையாடும் நேரத்தை விட படிப்பதற்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
48 சதவீதம் பெரியவர்கள் விளையாடும் இளம் வயதை கடந்துவிட்டதாக நினைத்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.
45 சதவீதம் பேர் பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அது திருமண வாய்ப்புகளுக்கும் இடையூறாக வரலாம் என்று நம்புகிறார்கள்.
உடல்நல அபாயங்கள், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்க, பெரியவர்கள் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடம் சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
உடற்பயிற்சிகள் தான் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இதன் மூலம் மனநலமும், உடல் நலமும் பாதுகாக்கப்படும். சிறுமிகள் இளமைப் பருவத்தை அடைந்த பிறகு, மேலும் வீட்டு வேலைகள் மற்றும் கவனிப்புப் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது.
பூங்காக்கள் மற்றும் மைதானங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாகவும் நகரங்களில் உள்ள பெண்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் பெண்கள் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்றாலும், செய்யக்கூடாது என்ற தவறான கருத்து உள்ளது. இந்தியப் பெண்களின் முக்கால்வாசி சுறுசுறுப்பான நேரமானது வீட்டு வேலைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவனித்து கொள்வதில்தான் செலவிடப்படுகிறது.
கிராமப்புறங்களை ஒப்பிடும்போது நகரப் பகுதியில் உடலுக்கான பயிற்சி பெண்களிடம் குறைவாக காணப்படுகிறது.
இளம் வயது பெண்களின் உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சமூக பாதுகாப்பு தொடர்பான அச்சம், இதன் காரணமாக 20 கோடி பேர் சுறுசுறுப்பை தொலைத்து செயலற்றவர்கள் போல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.