உடற்பயிற்சி

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க இப்படியெல்லாம் கூட வழி இருக்கா...?

Published On 2023-11-29 09:48 GMT   |   Update On 2023-11-29 09:48 GMT
  • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் யோகாசனம்.
  • மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

உங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம்.

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும். மேலும் இந்த யோகாசனத்தை செய்வதன் மூலம் கழுத்து மற்றும் முதுகு வலி குணமாகும்.

சவாசனம்:

இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

தலை எந்தப்பக்கமும் சாயாமல் இரு புஜங்களுக்கு நடுவில் நேராக இருக்கட்டும். தலைக்கு நேராக முதுகெலும்பு இருக்கட்டும். இடது, வலது உடல் பாகம் சமமாக தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும்.

மார்பை குறுக்காமல் நிமிர்த்தி வைக்கவும். கண்களை அழுத்தாமல் லேசாக மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் 10-15 வினாடிகள் அப்படியே இருங்கள்.,

இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் மன அழுத்தங்கள் குறைந்து உயர் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைய தொடங்கி விரைவில் முழுமையாக குறைவதை நீங்களே காணலாம்.

Tags:    

Similar News