உடற்பயிற்சி

முதுகுத்தண்டை வலுவாக்கும் பார்ஸ்வ உத்தனாசனம்

Published On 2023-07-26 03:46 GMT   |   Update On 2023-07-26 03:46 GMT
  • நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுகிறது.
  • மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன.

செய்முறை

முதலில் விரிப்பில் மேல் இரு கால்களையும் சேர்த்து வைத்தபடி நேராக நிற்கவும். பின் வலதுகாலை இடது காலில் இருந்து ஒரு இரண்டடி தூரம் இருக்கும்படி முன்னோக்கி நகர்த்தி வைக்கவும்.

இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டுசென்று முழங்கைகளை மடக்கி கட்டிக்கொள்ளலாம் அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவது போல முதுகின் பின்னால் வைத்து கொள்ளலாம்.

அதன் பின் மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து வலது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 விநாடிகள் நிற்கவும்.

பின் மெதுவாக நிமிர்ந்து கால்களை மாற்றி செய்யவும். அதாவது வலது காலுக்கு பதிலாக இடது காலை முன்னோக்கி நகர்த்தி வைத்து இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கொண்டு சென்று முழங்கைகளை கட்டிக்கொண்டோ அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவது போல வைத்துககொண்டோ முன்போல மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து இடது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 விநாடிகள் இருக்கவும். இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 3 முதல் 5 முறை செய்யவும்.

கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, குடல் இறக்கம் உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இதை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

பயன்கள்

வயிறு, முதுகு, இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதோடு அவைகளுக்கு வலுவையும் தருகின்றன. மேலும் நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன. கழுத்து, தோள்பட்டை, முழங்கை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனைகளையும் போக்குகிறது.

Tags:    

Similar News