தினமும் பிராணாயாமம் செய்வதால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்...
- ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
- நாள்தோறும் பிராணாயாமம் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
ஆழமாக சுவாசிக்காமல் இருப்பதனால் நாள்பட்ட மனஅழுத்தம் ஏற்படுவதோடு, உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட பிராணாயாமம் சிறந்த வழியாக உள்ளது.
பண்டைய காலத்தில் யோகா பயிற்சியின்போது ஒரு அங்கமாக பிராணாயாமம் என்கிற மூச்சு பயிற்சி இடம்பெற்றிருந்தது. பிரமாரி, கபால் பதி, நதிசோதனா, உஜ்ஜயி, பாஸ்த்ரிகா என பல்வேறு விதமான பிராணாயாமம் தொழில்நுட்பங்கள் சுவாச பயிற்சியில் கட்டுப்பாட்டை கொண்டுவரவும், மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவை தரவும் உதவுகிறது.
அதேபோல் பிராணாயாமம் பயிற்சி நாள்தோறும் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, அமைதியாக உணர வைக்கிறது.
பிராணாயாமம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தத்தின் மூலமாக தேவையான ஊட்டச்சத்துகளை தருகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. மேற்கூறிய நன்மைகளை பெற வேண்டுமானால் நாள்தோறும் பிராணாயாமம் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
ஆழாமான சுவாசத்தை சுவாசிப்பதன் மூலம் உங்கள் கார்டிசோல் அளவை உடனடியாகக் குறைக்கலாம். இதனால் மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைக்கப்படுகிறது.
பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
* உங்களது கோபத்தை கட்டுப்படுத்துகிறது
* பசி உணர்வை சீராக வைக்க உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான முதல் படியாக உள்ளது.
* உங்களது தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், மனநிலை மாற்றத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பீர்கள். இதனால் உங்களை சுற்றி இருப்பவர்களோடு உரையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
* உங்களின் வேலை திறனை மேம்படுத்துகிறது
* நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
* தன்னுடல் தாக்க நோய்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது
* உங்களின் தூக்கத்தின் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்த உதவுகிறது
* நாள்தோறும் பிராணாயமம் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனநல ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது
* மூச்சுப்பயிற்சி செய்வதனால் நாள்பட்ட அழற்சிகள் குறைகின்றன
* மூச்சுப்பயிற்சி மேற்கொள்வதால் ஹார்மோன் சமநிலையின்மையை பராமரிக்க உதவுவதோடு, நாள் முழுவதும் ஆற்றல் நிறைவாக இருப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது
* ஆழாமான சுவாசிப்பதன் மூலம் ஆக்சிஜன் உள்இழுக்கப்பட்டு, உடலில் உள்ள கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இந்த உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவையாகவே உள்ளது