உடற்பயிற்சி

ஜிம் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை

Published On 2023-03-04 04:10 GMT   |   Update On 2023-03-04 04:10 GMT
  • ஒரு நாளைக்கு 20 முதல் 60 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • உடல்நிலையை தற்போது இருக்கும் சூழலை பொறுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்ய இருக்கும் நபர்கள் முதலில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது மிகச்சிறந்தது. ஏனெனில் இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களால் இயன்ற உடற்பயிற்சியை மட்டும் செய்து ஆரோக்கியத்தை பெறலாம். இந்த நோய் குறைபாடு உடையவர்கள் சாதாரண நபர்களை போல உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. அதைவிட பகுதியளவோ அல்லது அதற்கும் குறைவான விகிதத்தில் மட்டுமே பெற வேண்டும். இதற்காக முதலில் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்..

1.இதய சகிப்புத்தன்மை- கார்டியோ என்டியூரன்ஸ்

2.உடல் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை(உடல் ஏற்றுக்கொள்ளும் தன்மை)

3.உடல் அமைப்பு.

இவை மூன்றும் ஜிம்மிற்கு செல்லும் ஒருவர் செய்து கொள்வது நன்மையை உண்டாக்கும்.

உடற்பயிற்சி செய்யும் முறை :

உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒருவர் பளு தூக்கும் உபகரணங்களின் எடையளவுகளை படிப்படியாகவே அதிகரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் ஒரு நாளைக்கு 20 முதல் 60 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலை, மாலை இருவேளையிலும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் 30 நிமிடங்கள் போன்ற விகிதத்தை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் தமது உடல்நிலையை தற்போது இருக்கும் சூழலை பொறுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூக்கமின்மை மற்றும் உடல் பாதிப்பு உள்ள நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதே நன்மை.

அதோடு தனிப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது ஆபத்து இல்லாத பயணத்தை உருவாக்கும்.

Tags:    

Similar News