உடற்பயிற்சி

தினமும் ஒழுங்காக சாப்பிடாவிட்டால் இதுதான் நடக்கும்...!

Published On 2023-12-14 08:42 GMT   |   Update On 2023-12-14 08:42 GMT
  • சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை.
  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் பல காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

 உயிரினங்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே, இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது.

 ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் கூட உங்கள் மூளை உங்கள் பேச்சை கேட்காது. எதைப்பார்த்தாலும் கோபமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழக்கிறது. இதனால் கோபமும், எரிச்சலும் உண்டாகும்.

உணவினை சாப்பிடாமலோ அல்லது குறைவாக சாபிடுவதன் மூலம் உடலில் ஹார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

 தினமும் ஒருவேளை உணவை தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலமாகவோ உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படும்.

தொடர்ந்து உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையத்தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.

Tags:    

Similar News