சாதாரண பல் சொத்தை பிரச்சனை ஆபத்தாக மாறுமா?
- பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
- பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும்.
காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம்
பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும்.
Atherosclerosis இந்த பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இருதய நோய் உள்ளவர்கள் பல் மருத்துவரை அணுகும் போது இருதய நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் மாத்திரைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
ஈறுகளில் உள்ள கிருமிகளை உண்டாக்கும் இன்பக்ஷன் மூலமாக நமது மூளையில் இருக்கும் செல்கள் பாதித்து நமக்கு ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற நோய்களை உண்டாக்கும். இப்படியும் ஆகுமா என பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பலரும் பல் பிரச்சினையை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர்.
நீரழிவு நோய் உள்ள ஒரு சிலருக்கு எவ்வளவு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், சாப்பாடு திட்டமாக எடுத்துக்கொண்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையவே குறையாது. ஏன் என்றால் அவர்களின் ஈறுகளில் உள்ள கிருமிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விடாது. எனவே நமது பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.