பொது மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

Published On 2023-04-12 08:53 GMT   |   Update On 2023-04-12 08:53 GMT
  • சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது.

சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது. அவை:

1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்,

2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்,

3) இன்சுலின் ஊசி் செலுத்தி கொள்பவர்கள்,

4) உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள்,

5) வயது 18-க்கும் குறைவானவர்கள்,

6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்,

7) ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்,

8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்,

10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றுள்ளவர்கள்.

நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

Tags:    

Similar News