இடுப்பு எலும்பில் ஜவ்வு விலகல்... கழுத்து எலும்பு, நரம்பு வலிக்கு சித்த மருத்துவத்தில் குணம் கிடைக்குமா?
- சிலருக்கு இடுப்பு எலும்பில் ஜவ்வு விலகியிருந்தால் கழுத்து எலும்பு, நரம்பு வலி ஏற்படும்.
- காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையேயும் ஒரு சதையாலான 'டிஸ்க்' இருக்கும். இந்தப் பகுதியில் எண்ணெய் போன்ற `சைனோவியல்' என்ற திரவம் இருக்கும். இரண்டு எலும்புகள் உராய்வில்லாமல் செயல்படவும், உடல் அசைவிற்கும் இது உதவுகிறது.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், காயங்கள், விபத்துக்கள் இவைகளைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத் தீர்வுகள்:
1. அமுக்கரா சூரணம் 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி பவள பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். (அல்லது)
அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கிமுத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
2. அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
3.தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித் தைலம், சிவப்பு குக்கில் தைலம், விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு, இடுப்பு, கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.
4.வாதமடக்கி, வாதநாராயணன், முடக்கற்றான், தழுதாழை, நொச்சி, பழுத்த எருக்கம் இலை இவைகளை எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
5. உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை, முட்டை வெண் கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை, வெந்தயம், உளுந்து இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499