பொது மருத்துவம்

குளிர்காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது

Published On 2024-01-12 08:48 GMT   |   Update On 2024-01-12 08:48 GMT
  • உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
  • நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

அத்திப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. இந்த பழம் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதோடு நமது செரிமான செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடல் எடையை பராமரிக்க உதவக்கூடிய நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் ஏ, ரத்தம் உறைவதற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும் வைட்டமின் கே மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் பி6 போன்றவை அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது.

இதுதவிர நமது இதய ஆரோக்கியம், தசை செயல்பாடு, எலும்பு அடர்த்தி அகியவற்றுக்கு உதவும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் அத்திப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

குளிர்காலத்தில் ஏன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்?

அத்திப்பழத்தை அப்படியே பிரெஷாகவும் சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். இதிலிருக்கும் இனிப்புச் சுவையை ரசித்து உண்ணும் போது நமக்கு எந்த குற்றவுணர்ச்சியும் ஏற்படுவதில்லை. மேலும் அத்திப்பழத்தில் உடலை சூடுபடுத்தும் தன்மை உள்ளது.

இதன் காரணமாக குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பை கொடுத்து தேவையற்ற உடல்நலக் கோளாறுகளில் இருந்து நம்மை காக்கிறது. நமது தினசரி டயட்டில் அத்திப்பழத்தை பயன்படுத்தி வரலாம்.

Tags:    

Similar News