பொது மருத்துவம்
null

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

Published On 2024-05-30 09:50 GMT   |   Update On 2024-05-30 09:52 GMT
  • உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.
  • அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும்.

சிறுநீரகங்கள் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். சிறுநீரகத்தின் செயலிழப்பு கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் ரத்தத்தில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். 

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்:

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்சனைகளுக்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம்.

* அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு அதிகமாக எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாகும். சிறுநீரகம் சரியாக வேலை செய்யாதவர்களுக்கும் அசைவ உணவு கொடுக்க கூடாது.

* சிறுநீரகம் தொடர்பாக வரும் நோயை தடுப்பது கடினம். சிறுநீரக பிரச்சனை இந்த ஒரு காரணத்தால் தான் வருகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மரபு காரணமாகவும், வயது காரணமாகவும் சிறுநீரக பிரச்சனை வருகிறது.

* சிறுநீரகம் தொடர்பாக உண்டாகும் நோய்களை தவிர்க்க உடல் பரிசோதனை, 50 வயதிற்கு மேல் ரத்த பரிசோதனை, பிஎஸ்ஏ சோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதால் ஆரம்ப காலத்திலேயே புராஸ்டேட் வீக்கத்தை கண்டுபிடிக்கலாம். புராஸ்டேட் வீக்கத்தால் வரும் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

Tags:    

Similar News