பொது மருத்துவம்

வெயிலுக்கு இதமான ஐஸ் வாட்டர்: பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம்

Published On 2024-05-05 07:09 GMT   |   Update On 2024-05-05 07:09 GMT
  • சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
  • கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும்.

கோடை காலத்தில் பலரும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர் பானங்களை ருசிப்பதற்கு தொடங்கிவிடுவார்கள். கடுமையான வெப்பத்தில் இருந்து உடலை காப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டிகளை தண்ணீரில் போட்டு பருகுவார்கள்.

தண்ணீர் பாட்டில்களை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து அதனை குளிர்ச்சியடைய வைத்து அந்த நீரை பருகவும் செய்வார்கள். அத்தகைய ஐஸ் நீரை பருகுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.


ஐஸ் நீரை அதிகமாக குடிப்பது உடலுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்று வலியும் ஏற்படலாம். சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக தொண்டைப்புண், எரிச்சல் ஏற்படக்கூடும்.

ஐஸ் நீரை குடிக்கும்போது முதுகு தண்டுவட பகுதியிலுள்ள பல நரம்புகள் குளிர்ச்சியடையும். அதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிப்படையும். அது தலைவலியாக வெளிப்படும். அதிலும் ஒற்றைத்தலைவலி பிரச்சினை கொண்டவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அடிக்கடி சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கோடையில் தினமும் ஐஸ் நீரை குடித்து வந்தால் தொண்டையில் வீக்கம் மற்றும் அசவுகரியம் ஏற்படும். சாப்பிட்ட பிறகு ஐஸ் கட்டி கலந்த குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் சளி படிந்துவிடும். அடிக்கடி சளி, காய்ச்சல், ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்களாக இருந்தால் நிலைமையை மோசமாக்கும்.


ஐஸ் நீரை அதிகமாக உட்கொண்டால் இதயத் துடிப்பு குறையும். கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும். இதுதான் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்ட நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

ஐஸ் நீரை அடிக்கடி உட்கொள்ளும் போது பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பற்கள் குளிர்ச்சியடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த பொருளையும் மென்று உட்கொள்வதற்கு கடினமான நிலைமையை உருவாக்கும். பற்களின் எனாமலை அரித்து, அவற்றை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும். குளிர்ச்சியாக எந்த பொருளை உட்கொண்டாலும் பல் கூச்சம், பல் குளிர்ச்சி அடைவது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

Tags:    

Similar News