null
- தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு அதிக காலம் நாம் வாழலாம் என்று 'நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தினமும் ஒரு கையளவு நட்ஸ்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நட்ஸ்களை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக உடல்நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நட்ஸ்கள் சாப்பிடுபவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். இவை எல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.