கொத்தமல்லி இலையின் மருத்துவ பயன்கள்
- கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என எல்லா வைட்டமின்களும் உள்ளன.
- கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது.
கொத்தமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி இலைகளில் நிறைய சிறப்புகள் உள்ளன. அவை சுவையான மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன.
கொத்தமல்லியின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலையின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவையாக உள்ளன. கொத்தமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
* கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என எல்லா வைட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இவை நமக்கு நல்ல கண் பார்வையை அளிக்கிறது.
* கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட வைக்க உதவுகிறது. இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
* கொத்தமல்லி இலைகளின் பிரகாசமான பச்சை நிறத்திற்கு அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் தான் காரணமாகும். இது நொதி செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து விடும். கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் இரத்த சர்க்கரை அளவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நன்மை அளிக்க பயன்படுகிறது.
* கொத்தமல்லி இலைகளை வழக்கமாக உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கும் உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்தது.
* கொத்தமல்லி இலைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொத்தமல்லி இலைகளின் அழற்சி எதிர்ப்பு செயல்பாடு எலும்பை மூட்டுவலி தொடர்பான வலியிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.
* கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு, வாயு அல்லது குமட்டல் போன்ற பல்வேறு செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகிறது. கொத்தமல்லி இலை சாறை 1 அல்லது 2 டீ ஸ்பூன் சாற்றை மோரில் கலந்து குடிக்கலாம்.
* கொத்தமல்லி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், ஜீரண சக்தியை எளிதாக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.