பொது மருத்துவம்

புகை பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

Published On 2024-07-12 03:02 GMT   |   Update On 2024-07-12 03:02 GMT
  • பொதுவாக 54 மற்றும் 70 வயதிற்குள் இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.
  • நுரையீரல் புற்றுநோயால் ஆண்களில் அதிக புகையிலை பயன்பாடு கொண்டவர்களுக்கு 42.4%, பெண்களில் 14.2% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் உண்டாக காற்று மாசுபாடு மற்றும் மரபணு வேறுபாடு மட்டுமே பெரும் பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள் புகைபிடித்ததே இல்லை என்றும், காற்று மாசுபாடு தான் புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

காற்று மாசுபாடு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், குறிப்பிட்ட காலநிலை மாறுபாடுகள் நுரையீரல் புற்றுநோய்க்கு நேரடியாக பங்களிக்கின்றன.

மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையின் குழு கூறுகையில், உலகளவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில் "இந்தியா-உலக விகிதம் 0.51" என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் மேற்கத்திய நாடுகளை விட ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே ஏற்படுகிறது. பொதுவாக 54 மற்றும் 70 வயதிற்குள் இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.

அமெரிக்கா (38 வயது) மற்றும் சீனா (39 வயது) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள்தொகை (சராசரி வயது 28.2 வயது). காற்று மாசுபாடு மற்றும் மரபணு மாற்றங்கள் போன்றவையும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாகின்றன.

நுரையீரல் புற்றுநோயால் ஆண்களில் அதிக புகையிலை பயன்பாடு கொண்டவர்களுக்கு 42.4%, பெண்களில் 14.2% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றம் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பை பெரிதாக்குகிறது. இது ஏற்கனவே ஆசியாவில் குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாக உள்ளது.

Tags:    

Similar News