பொது மருத்துவம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவின் அறிகுறிகள்

Published On 2023-12-17 06:03 GMT   |   Update On 2023-12-17 06:03 GMT
  • சிலருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது உண்டு.
  • 28 வாரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்படும்.

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் வருமாறு:-

* இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

* மிகவும் சோர்வாக உணர்தல்.

* தோல் உலர்வாக இருப்பது.

* கை அல்லது பாதங்களில் மரத்துப் போவது அல்லது உறுத்தல் ஏற்படுவது.

* புண் வந்தால் மெதுவாக ஆறுவது.

* வழக்கத்துக்கு மாறாக அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுதல்.

பொதுவாக பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவது உண்டு. அந்த காலகட்டத்தில் 24 முதல் 28 வாரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முந்தைய பிரசவத்தின்போது நீரிழிவு இருந்தாலும், பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு அதிகமாக இருந்தாலும் தாய்க்கு நீரிழிவு நோய் வரக்கூடும்.

அதிகபட்சமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கர்ப்ப காலத்தில் 25.9 சதவீத பெண்களுக்கு நீரிழிவு காணப்படுவதாக சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.

அமெரிக்காவில் 2 முதல் 10 சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலும் பலருக்கு பிரசவத்துக்கு பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு முந்தைய சாதாரண நிலைக்கு வந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாவது வகை நீரிழிவு நோயாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், கட்டுப்பாடான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News