உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க என்ன செய்ய வேண்டும்?
- ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.
மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.