பொது மருத்துவம்

உடலில் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது?

Published On 2023-10-26 07:10 GMT   |   Update On 2023-10-26 07:10 GMT
  • இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம்.
  • கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம்.

பொதுவாக நம் உடலில் அடிக்கடி சுளுக்கு ஏற்பட்டால் உடனே மெடிக்கலுக்கு சென்று ஏதாவது மாத்திரை அல்லது பேண்டேஜ் வாங்கி ஒட்டிக்கொள்வோம். ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

* கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை தடவி மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவுகிறது.

* பொதுவாக கல் உப்பு தசை வலி மற்றும் தசைபிடிப்பை குறைக்க உதவுகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் சுளுக்கு வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

* மலிவாய் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆமணக்கு எண்ணெய்யை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் சுளுக்கினால் ஏற்படும் வலி குறையும்.

* பொதுவாக ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. மேலும், ஆப்பிள் வினிகரில் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்கும் பண்புகள் உள்ளன. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சுளுக்கினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

* ஆலிவ் எண்ணெய் கூட வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. சுளுக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது சுளுக்கால் உண்டான வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Tags:    

Similar News