குழந்தைகள் விரும்பும் சாக்லேட் பான் கேக்
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் பான்கேக்
- விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- கால் கப்
நாட்டு சர்க்கரை கால் கப்
கோகோபவுடர்- 3 ஸ்பூன்
பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்
பால்- 100 கிராம்
முட்டை-1
சாக்லேட் சிரப்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப், உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி எடுத்துக்கொள்ளவும்.
இந்த கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து கெட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும். சாக்லேட் சிப்ஸ் (விரும்பினால்) இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையை தோசை தவாவில் வெண்ணெய் அல்லது நெய் தடவி பான் கேக் ஊற்றி 2 நிமிடத்திற்கு பிறகு திருப்பி போட்டு எடுக்கவும். நீங்கள் விரும்பினால் பான் கேக் மீது சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்கூலுக்கு ஸ்நாக் பாக்சை நிறப்புவதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக கொடுப்பதற்கும் ஏற்றது.
சாக்லேட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லேட் பான் கேக் என்றால் விடவா போகிறார்கள். வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.