- மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
- கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
சமோசா சீட்- 7 நம்பர்
மட்டன் 250 கிராம்
பச்சைமிளகாய்- 1 பொடிதாக நறுக்கியது
தனியா விதை- 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள்- கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தூள்- கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும். அதன் பச்சை வாசனை போன பிறகு அதில் 3 அல்லது 4 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு 250 கிராம் மட்டன் கொத்துக்கறி சேர்க்க வேண்டும். மட்டன் 4 முதல் 5 நிமிடம்வரை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். சிறிதளவு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், உப்பு , கரம்மசாலா தூள், பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து அனைத்து பொருட்களும் நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும்.
அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும். அடுப்பை அணைத்து விட்டு இந்த மசாலா கலவையை நன்கு ஆற விட வேண்டும்.
அடுத்து சமோசா சீட்டை எடுத்து கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலா கலவையை நிரப்பி மூடி விட வேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து செய்து வைத்துள்ள சமோசாக்களை பொன்நிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மொறுமொறுப்பான மட்டன் கீமா சமோசா தயார்.