சமையல்

சுவையான அவல் லட்டு செய்யலாம் வாங்க...

Published On 2024-08-03 09:41 GMT   |   Update On 2024-08-03 09:41 GMT
  • தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்

நாட்டு சர்க்கரை - 1 கப்

பால் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1/4 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

பாதாம் - 10

முந்திரி, திராட்சை - 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். நெய்யில் அவலை சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுக்க வேண்டும். அவல் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய் துருவலை வாணலியில் சேர்த்து லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காயை சேர்த்து அரைக்க வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அரைக்க வேண்டும்.

அத்துடன் பொடித்த அவல், தேங்காய் பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் லேசாக வறுக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு நெய், பால் சேர்த்து நன்கு பிசைந்து விருப்பப்படி உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

சுவையான சிகப்பு அவல் லட்டு தயார்.

Tags:    

Similar News