சமையல்

10 நிமிடத்தில் செய்யலாம் கோதுமை மாவு வாழைப்பழ அப்பம்

Published On 2023-06-16 09:33 GMT   |   Update On 2023-06-16 09:33 GMT
  • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
  • கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்

வெல்லம் - 1/2 கப்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

கனிந்த வாழைப்பழம் - 2

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :

வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News