- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம்.
காலை சிற்றுண்டியாக தினமும், இட்லி, தோசை, உப்புமா, என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த வாழைப்பழம் பிரட் டோஸ்ட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செய்வதும் எளிதானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதனை ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம் அல்லது ஈவ்னிங் ஸ்நாக்காகவும் செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள்- 1
வாழைப்பழம்- 2
முட்டை- 1
சர்க்கரை- 4 ஸ்ப்பூன்
தேங்காய்துருவல்- ஒரு கப்
செய்முறை:
வாழைப்பழங்களை தோலுரித்து அதனை வட்ட வடிவங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு சர்க்கரை, 5 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் மற்றும் அதன்மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி எடுக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி விட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பிரட்டுகளை தட்டையாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் நடுவே வாழைப்பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து ரோல்களையும் செய்து அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காயந்ததும் இந்த பிரட் ரோல்களை எடுத்து முட்டை கலவையில் முன்னும் பின்னுமாக புரட்டி எடுத்து தோசை தவாவில் சேர்க்க வேண்டும். இதனை திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அருமையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் தயார்.