சமையல்
குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பழ பூரி
- இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
- இந்த பூரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
எண்ணெய்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
மிக்சியில் வாழைப்பழம, ஏலக்காய் தூள், சர்க்கரை, தயிர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் சீரகம், சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரைத்ததே போதுமானது.
மாவை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் மாவை பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான வாழைப்பழ பூரி ரெடி.