உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் பார்லி வெஜிடபிள் சூப்
- பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
- இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.
தேவையான பொருட்கள்
பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)
பார்லி அரிசி - 4 டீஸ்பூன்
பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
துளசி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health