நார்ச்சத்து நிறைந்த குடைமிளகாய் ஆம்லெட்
- குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.
- குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - ஒன்று
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)
ப.மிளகாய் - 1
கேரட் துருவியது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும் பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
ஒரு பௌலில் முட்டையை உடைத்து விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடமிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் திருப்பி திருப்பி விட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health