சமையல்

சப்பாத்திக்கு சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா

Published On 2023-02-15 09:18 GMT   |   Update On 2023-02-15 09:18 GMT
  • காலிஃப்ளவரில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 1 பூ

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.

அடுத்து அதில் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.

மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டு அடுப்பை அணைக்கவும்.

சூப்பரான காலிஃப்ளவர் சுக்கா ரெடி.

Tags:    

Similar News