சமையல்
null

குழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் மசாலா பூரி

Published On 2023-04-24 06:04 GMT   |   Update On 2023-04-24 06:04 GMT
  • குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
  • சீஸ் பூரியை வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செய்து கொடுத்து அசத்தலாம்

தேவையான பொருட்கள்:

பூரி மாவிற்கு...

கோதுமை மாவு - 1 கப்

ரவை - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு...

துருவிய சீஸ் - 1 கப்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் மசாலா பூரி தயார்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News