சமையல்

காரசாரமான செட்டிநாடு சிக்கன் ரசம்

Published On 2023-04-23 06:19 GMT   |   Update On 2023-04-23 06:19 GMT
  • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
  • சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த ரசம் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சிக்கன்(எலும்புடன்) - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 1

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 1

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

பட்டை, லவங்கம் - தலா 1

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிக்கன் சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

பின்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

Tags:    

Similar News