15 நிமிடத்தில் செய்யலாம் சிக்கன் பொடிமாஸ்...
- சிக்கனில் எத்தனையோ வகை ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க..
- சிக்கன்ல பொடிமாஸ் செஞ்சிருக்கீங்களா ? இப்போ செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
எலுமிபில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
குடைமிளகாய் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவைக்கு ஏற்ப
செய்முறை:
குடைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
வாணலியில் சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆற வைத்து மிக்சிஜாரில் போட்டு திரித்திரியாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த சிக்கன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாயத் தூள், கரம் மசாலா தூள், சிறிது உப்பு(சிக்கன் வேகவைக்கும் போது உப்பு சேர்த்துள்ளது) சேர்த்து நன்றாக கிளறவும்.
சிக்கன் உதிரிஉதிரியாக வந்தவுடன் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் பொடிமாஸ் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health