சமையல்

காரசாரமான ஸ்நாக்ஸ் சில்லி பிரெட்

Published On 2023-07-07 09:32 GMT   |   Update On 2023-07-07 09:32 GMT
  • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது.

தேவையான பொருட்கள்

பிரெட் டோஸ்ட் செய்ய

பிரெட் துண்டுகள் - 5

எண்ணெய் - 3 தேக்கரண்டி

சில்லி பிரெட் செய்ய

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

குடைமிளகாய் - 1

வெங்காயத்தாள் வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை -சிறிதளவு

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி

தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி

சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி

தண்ணீர் - 1/4 கப்

வெங்காயத்தாள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், வெங்காயத்தாள்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.

பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பிரெட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.

ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும்.

அடுத்து டோஸ்ட் செய்த பிரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும்.

காரமான சில்லி பிரெட் தயார்!

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News