சமையல்

சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான காய்ந்த மிளகாய் சட்னி

Published On 2022-11-14 05:52 GMT   |   Update On 2022-11-14 05:52 GMT
  • இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
  • இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 1 பெரியது

புளி - சிறிது,

பூண்டு - 5 பல்

உப்பு- 1 /2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.

இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.

இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

Tags:    

Similar News