கலக்கலான தேங்காய் பால் மீன் குழம்பு
- மீனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் - அரை கிலோ
தேங்காய் பால் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கல் உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
* குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.
* மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health