10 நிமிடத்தில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு
- எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
- பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு முறுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த முறுக்கை செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு- 2 கப்
உளுந்து 2 கப்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு- 2
உப்பு தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
ஒரு டீஸ்பூன் மிளகை உரலில் போட்டு பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும், அது ஆறிய பின்னர் உலர்ந்த மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்துக்கொள்ள வேண்டும்,
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் நெய் அல்லது எண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு, முறுக்காக பிழிந்து எண்ணெய்யில் போட்டு சிவக்கும் அளவிற்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான "உருளைக் கிழங்கு முறுக்கு' தயார்.