பருப்பு, அரிசி சேர்த்து சூப்பரான கிச்சடி செய்யலாம் வாங்க...
- ரவை கிச்சடிக்கு மாற்றாக இந்த கிச்சடி செய்யலாம்.
- குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - சிறிதளவு
பட்டை - 1 சிறிய துண்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
ஒரு பானில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் சீரகம், பிரியாணி இலை, பட்டை சேர்த்து வறுக்கவும்.
அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வேகவைத்த அரிசி பருப்பை சேர்த்து கலக்கவும்.
இறுதியாக நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பருப்பு கிச்சடி தயார்!