- பனீர் ஃபர்பியை பார்த்ததும் அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள்
- எல்லா பண்டிகை நாட்களிலும் இந்த சுவீட் இல்லாமல் முழுமை பெறாது.
தேவையான பொருட்கள்
பனீர்-200 கிராம்
சர்க்கரை-200 கிராம்
முந்திரி, பாதாம்- ஒருகப்
பால்-1/2 லிட்டர்
பால்பவுடர்-100 கிராம்
செய்முறை
ஒரு மிக்சி ஜாரில் பனீரை போட்டு ஒரு முறைபொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு முந்திரியையும், பாதாம் பருப்பையும் ஒரு பிளேட்டில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் காடாயை வைத்து காய்ந்ததும் அதில் 100 கிராம் பால்பவுடர் போட்டு அதில் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்க்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்த பனீர், துருவிய பாதாம், முந்திரி கலவை ஆகியவற்றை சேர்த்து கெட்டி இல்லமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையை சிறிது கெட்டிபதம் வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த கலவையை ஒரு நெய் தடவிய பிளேட்டில் கொட்டி நன்றாக ஆறியதும் துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். சுவையான பனீர் ஃபர்பி தயார். இந்த ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.