சமையல்

சுவையான... தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி...

Published On 2024-06-25 13:08 GMT   |   Update On 2024-06-25 13:08 GMT
  • சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
  • வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - பொறிக்க

மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

கடலை பருப்பு 100 கி

உளுந்தம் பருப்பு - 100 கி

மிளகு - 50 கிராம்

கருப்பு எள்ளூ - 50 கி

சீரகம் - 50 கி

வரமிளகாய் - 50 கி

இட்லி மாவு - 1 கிலோ


செய்முறை:

• முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.

• இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

• வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

• ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.

• பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.

• பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

• பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.

• பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.

• பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

• இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.

Tags:    

Similar News