கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேராமல் தடுக்கும் தனியா சட்னி
- வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
- இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தனியா - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
பூண்டு - 2 பல்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health