சமையல்

உங்களுக்கு பிடிக்குமா? மொறு மொறு நெத்திலி கருவாடு வறுவல்

Published On 2023-06-28 09:38 GMT   |   Update On 2023-06-28 09:38 GMT
  • நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
  • நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு - 100 கிராம்

தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை :

நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள்.

அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

கடாயை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள்.

கருவாடு ரெடி ஆனதும் சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி இந்த நெத்திலி கருவாட்டை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News