சமையல்

சூப்பரான சைடிஷ் முட்டை கபாப்

Published On 2022-11-11 06:25 GMT   |   Update On 2022-11-11 06:25 GMT
  • ஒரு முட்டையில் 72 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் இருக்கிறது.
  • முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை- 4

சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

சீரகத் தூள்- 1/4 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

சோள மாவு- ஒரு டீஸ்பூன்

வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

மல்லித் தூள்- 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

உப்பு- 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- தேவையான அளவு

மசாலா செய்ய :

வெங்காயம் - 1

சாட் மசாலா- 1/2 டீஸ்பூன்

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் பேஸ்ட்- ஒரு டீஸ்பூன்

வெண்ணெய்- 2 டீஸ்பூன்

மிளகாய் தூள்- 1/2 டீஸ்பூன்

உப்பு- 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை அரைத்து கொள்ளவும்.

வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

துருவிய முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

Tags:    

Similar News